Breaking News


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய ஜோ பைடன் வெற்றிச் சான்றிதழை பெற விடாமல் தடுக்கும் முயற்சியாக, வோஷிங்டன் டிசியிலுள்ள அமெரிக்காவின் தலைமையகமாக கபிடல் ஹில் கட்டட தொகுதியை முற்றுகையிட்ட ட்ரம்ப்பின் ஆதரவாளர் மீது பொலிஸ் நடத்திய துப்பாக்கி பெண்ணொருவர் உயிரிழந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் ஜனவரி 20ஆம் திகதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

ஆனால், தற்போதைய ஜனாதிபதியான டொனால்டி ட்ரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக அவர் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார். மேலும், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம்சுமத்தி நீதிமன்றத்திலும் வழக்குத்தொடர்ந்தார். அந்த வழக்குகள் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆனால், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் ட்ரம்ப் மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும் படியும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும்படியும் பேசுவது போன்ற ஒலிப்பதிவு வெளியாகி அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், ஜோ பைடன் வரும் 20ஆம் திகதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது.

பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை வழங்க எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அந்த முயற்சியை தடுக்கும் முயற்சியாக, அமெரிக்க தலைநகர் வோஷிங்டனின் உள்ள வெள்ளை மாளிகை நோக்கி ஆயிரக்கணக்கான ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டனர். கலைய மறுத்த போராட்டக்காரர்கள் மீது பொலிசார் துப்பாகிசூடு நடத்தினர். அதில் ஒரு ஒரு பெண் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

பிற்பகல் ஒரு மணியளவில் போராட்டம் ஆரம்பித்தது.

ட்ரம்ப் ஆதரவாளர்கள் கப்பிடல் ஹில் பகுதியின் பாதுகாப்பு சுற்றுவேலிகளை கடந்து உள்நுழைய முற்பட்ட போது நிலைமை மோசமடைந்தது. இதன்போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் படுகாயமடைந்து, பின்னர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூட்டை யார் நடத்தியதென்பது தெரியவில்லையென பொலிசார் தெரிவித்தனர்.

பல பொலிசாரும் காயமடைந்தனர்.

ட்ரம்ப் ஆதரவாளர்கள்  முற்றுகையிட்டதால் கபிடல் ஹில் மாளிகை சுற்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னரும், கபிடல் மைதானத்தில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் குவிந்திருந்தனர்.

பொலிசாருக்கு உதவ தேசிய காவல்படை பணிக்கமர்த்தப்பட்டது.

இந்த தாக்குதலால், ஜனாதிபதி தேர்தல் வெற்றியாளரை அறிவிக்க கூடிய கூட்டம் இடையில் கைவிடப்பட்டது. துணை ஜனாதிபதி மைக் பென்சும் கலவரத்தின் போது, கட்டடத்தில் தங்கியிருந்தார்.

இதனிடையே டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில்,

தயவு செய்து தொண்டர்கள் அமைதி காக்கவும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அவர்கள் உண்மையிலேயே நம் நாட்டின் பக்கம் தான் இருக்கிறார்கள். அமைதி காக்கவும் என பதிவிட்டுள்ளார்.

எனினும், முன்னதாக, மதியமளவில் ருவிற்றரில் பதிலிட்ட ட்ரம், கபிடல் ஹில்லை நோக்கிய பேரணிக்கு ஊக்கமளித்ததுடன், ஜோ பைடன் குழுவை ஜனாதிபதியாகும் முயற்சியிலிருந்து விலக வலியுறுத்தினார்

No comments

Note: Only a member of this blog may post a comment.