கொரோனா தொற்றாளருடன் தொடர்பிலிருந்த மருத்துவ அதிகாரிகள் சங்க தலைவர் டிமிக்கி! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

கொரோனா தொற்றாளருடன் தொடர்பிலிருந்த மருத்துவ அதிகாரிகள் சங்க தலைவர் டிமிக்கி!


அண்மையில் கொரோனா தொற்றிற்குள்ளான ஒருவருடன் முதல் வட்ட தொடர்பாளராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவிக்கையில், சமீபத்தில் வைத்திர் அனுருத்த பதெனியவின் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் பாதிக்கப்பட்ட நபர் கலந்து கொண்டார். மினுவாங்கொடவைச் சேர்ந்த தொற்றாளர் அளித்த தகவல்களின் அடிப்படையில், அவரது முதல் அடுக்கு தொடர்புகளைக் கண்டறிய நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.

இந்த மாதம் 10 ஆம் திகதி குறைந்தது நான்கு மணிநேரம் பாதெனியவின் இல்லத்தில் பாதிக்கப்பட்ட நபர் உட்பட பல மருத்துவர்கள் தங்கியிருப்பதை அவர்கள் கண்டுபிடித்ததாக உபுல் ரோஹன கூறினார். அதன்படி தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பாளர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைக்கு உட்படுத்துமாறு அறிவிக்க, நேற்று மாலை அனுருத்த பதெதேனியாவின் இல்லத்திற்கு சுகாதார பரிசோதகர்கள் சென்றிருந்தாலும், அவர் தனது இல்லத்தில் இருக்கவில்லை என்று உபுல் ரோஹன கூறினார்.

பதெனிய தற்போது கொழும்பில் இல்லை என்ற தகவல் அவர்களிடம் இருப்பதாக அவர் கூறினார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவரை பொதுச்சுகாதார பரிசோதகர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினார்.

கொரோனா தொற்றாளரின் முதல் வட்ட தொடர்பாளர் என்பதை அறிந்தால், தனிமைப்படுத்தும் நடைமுறைக்கு உட்படுத்த வேண்டிய கடமை பாதெனியவுக்கு இருப்பதாக தெரிவித்தார்.