மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது!


கோட்டாபய அரசின் கொடூர ஒடுக்குமுறைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் முன் பகுதியில் பல்கலைகழக மாணவர்கள் ஆரம்பித்துள்ள பட்டினிப் போர் தொடர்கிறது.

பொலிசார், துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினரின் மிரட்டலுக்கு அஞ்சாமல் மாணவர்கள் குழு போராட்டத்தை தொடர்ந்து வருகிறது.

யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக போராட்டதில் ஈடுபடுபவர்கள் கொரோனா தடுப்புச்சட்டத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு PCR பரிசோதனை செய்யபட்டுவார்கள் என காலையில் பொலிஸார் விடுத்த மிரட்டலையடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ள நிலையில் மாணவர்கள் சிலர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இடிக்கப்பட்ட தூபியை மீளமைக்க அனுமதிக்கப்பட வேண்டும்,
பொலிஸார் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய வேண்டுமேன கோரிகை முன்வைத்து போராட்டத்தை தொடர்கின்றனர்.