Breaking News


அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் வட கிழக்கு பிரச்சினை தொடர்பான ஆர்ப்பாட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 3ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகளால் நடாத்தப்படும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி ஆதரவு வழங்கும் என்பதுடன் குறித்த போராட்டத்தில் வடகிழக்கில் உள்ள தமிழ் இளைஞகளும்  அனைவரும் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏற்வூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடகிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அடக்குமுறைக்கு எதிராக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரளுமாறு வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடகிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்கள், பாரம்பரிய இந்து ஆலயங்களை அழிக்கும் செயற்பாடுகள், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்கள், முஸ்லீம் மக்களின் ஜனாசாகளை எரிப்பது, தமிழ் முஸ்லிம் அப்பாவி இளைஞர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் , சிறைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் என தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் திட்டமிட்டு நடாத்தப்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

உரிமைகளை இழந்து நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வாழும் எனது உயிர் இருக்கும் வரை நான்  தொடர்ந்தும் மக்களுடன் பயணம் செய்வேன் என்பதை இந்த போராட்டத்தின் ஊடாக தமிழ் மக்கள் புரிந்துகொள்வார்கள் எனவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments

Note: Only a member of this blog may post a comment.