Breaking News


பொத்துவில் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பார்த்தீபன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் குறித்த தாக்குதலுக்கும் எனக்கும் எந்தவிதமான சம்மந்தமுமில்லை என பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் அப்துல் வாசித் தெரிவித்தார்.

நேற்று (14) மாலை பதில் தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மீதான தாக்குதல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆளுநர் விசாரணைக்காக விஷேட குழு அமைத்தால் தவிசாளரை தற்காலிகமாக இடைநிறுத்துவதும் பிரதி தவிசாளரை பதில் தவிசாளராக நியமிப்பதும் வழமையே! இதில் மாற்றுக் கருத்தூக்கு வேறொன்றுமில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் பிரதி தவிசாளரை தாக்குவதற்கான எந்தவித தேவையும் எனக்கு இல்லை. இந்த தாக்குதலை வைத்து எனது அரசியல் பயணத்தை தடுப்பதற்காக சுமத்தப்படும் வீண் பழியாகும். பிரதி தவிசாளர் மீது தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தன்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச சபையின் பதில் தவிசாளராக இன்றைய தினம் (15) கடமையேற்கவுள்ள நிலையிலேயே இத்தாக்குதல் சம்பவம் (14) இடம்பெற்றுள்ளது.

அந்த தாக்குதலுக்கு இலக்கான பிரதித் தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் உயிர் ஆபத்தின்றி தலையிலும், கையிலும் ஏற்பட்ட காயங்களுக்கு பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments

Note: Only a member of this blog may post a comment.