Breaking Newsஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசில் தமிழர்கள் கோலோச்ச உள்ளனர், தமிழக வேர்களை கொண்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் குறித்து நமக்கு நன்கு தெரியும், இவர் மட்டும் அல்லாமல் அமெரிக்க அரசில் அதிகளவில் இந்திய வம்சாவெளியினரும், தமிழர்களும் கோலோச்ச உள்ளனர்.

கொரோனா வைரஸை எதிர்கொள்ள அமைக்கப்பட்ட குழுவில் மட்டும் விவேக் மூர்த்தி, செலினா என இரு இந்தியர்கள் உள்ளனர்.

செலினா கவுண்டர் தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். கடந்த 1998 முதல் 2012 வரையிலான கால கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, மால்வாய், எத்தியோப்பியா, பிரேசில் போன்ற நாடுகளில் காசநோய், ஹெச்.ஐ.வி. தொடர்பான மருத்துவ சேவை, ஆராய்ச்சிகளை செலினா மேற்கொண்டுள்ளார்.

கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தை குடும்பப் பூர்வீகமாக கொண்ட விவேக் மூர்த்தி, பிரிட்டனில் 1977-ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தவர்.

பின்னர், அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர், யேல் பல்கலைகழகத்தில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்தார்.

டாக்டர்ஸ் ஆப் அமெரிக்கா’ என்ற அமைப்பை தொடங்கியதன் மூலம் விவேக் மூர்த்தி அமெரிக்கா முழுவதும் பிரபலமடைந்தார், இதனைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு அமெரிக்க மருத்துவ சேவைப் படையின் தலைவராக அப்போதைய அதிபர் ஒபாமாவால் நியமிக்கப்பட்டார்.

வெள்ளை மாளிகை பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை பிரிவின் இயக்குநராக (Director of the Office of Management and Budget-OMB), இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் இணை அட்டர்னி ஜெனரலாக அமெரிக்கவாழ் இந்தியரான வனிதா குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் உயர்ந்த பதவிகளின் ஒன்றான இப்பதவியை அலங்கரிக்கும் முதல் பெண் இவராவார். முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில், பைடன் துணைத் தலைவராக இருந்தபோது வனிதா குப்தா முதன்மை துணை உதவி அட்டர்னி ஜெனரலாகவும், நீதித்துறையில் சிவில் உரிமைகள் பிரிவின் தலைவராகவும் பணியாற்றினார்.

சட்டப்படிப்பு முடித்தவுடனே வனிதா குப்தா, டெக்சாஸ் நகரத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறாக தண்டிக்கப்பட்ட 38 பேர் விடுவிக்க வாதாடி வெற்றிபெற்றார். இதில் பெரும்பாலோர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்.

அவர்களுக்கு இழப்பீடாக 6 மில்லியன் டாலரும் கிடைத்தது, இந்த வழக்கினால் வனிதா குப்தா புகழ்பெற்ற நபரானார்.

உஷ்ரா குடிமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம், மனித உரிமைகளுக்கான துணை செயலர் பொறுப்பு முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி உஷ்ரா ஷெயாவுக்கு வழங்கப்பட்டுள்ளது, இவர் ட்ரம்பின் கொள்கைகளை எதிர்த்து 2018 ஆம் ஆண்டு அமெரிக்க அரசில் தாம் வகித்து வந்த முக்கிய பொறுப்பை ராஜினாமா செய்தவர்.

மாலா அடிகா அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை முடிவுகள் இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் கர்நாடக உடுப்பி மாவட்டம் குண்டப்பூரை பூர்விகமாகக் கொண்டவர்.

கரிமா வர்மா ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் வெள்ளை மாளிகை அலுவலகத்தின் 'டிஜிட்டல்' இயக்குநராக கரிமா வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பிறந்த கரிமா வர்மா அமெரிக்காவின் ஒஹியோவில் படித்தவர். 'பாராமவுண்ட் பிக்சர்ஸ் வால்ட் டிஸ்னி ஏ.பி.சி. நெட்வொர்க்' உள்ளிட்ட பல்வேறு ஊடக நிறுவனங்களில் விளம்பரம் மற்றும் வர்த்தக பிரிவில் பணியாற்றியுள்ளார்.

சப்ரினா சிங் வெள்ளை மாளைகை ஊடகப் பிரிவு துணை செயலாளராக சப்ரினா சிங் நியமிக்கப்பட உள்ளார்.

ஆயிஷா ஷா வெள்ளைமாளிகையின் டிஜிட்டல் வியூகத்தின் முக்கிய உறுப்பினராக ஆயிஷா ஷா நியமிக்கப்பட உள்ளார். இவர் காஷ்மீரை பூர்வீகமாக கொண்டவர்.

காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட சமீராவும் வெள்ளை மாளிகையில் முக்கிய பொறுப்பை வகிக்க உள்ளார். இவர் தேசிய பொருளாதார மன்றத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட உள்ளார். இவர் காஷ்மீர் பள்ளதாக்கில் 70 -களில் பிறந்தார். கடைசியாக 2007ஆம் ஆண்டு இவர் காஷ்மீர் வந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

பாரத் ராமமூர்த்தி இந்திய வம்சாவளியை சேர்ந்த பாரத் ராம மூர்த்தியும் அமெரிக்க தேசிய பொருளாதார மன்றத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.

அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக துணை இயக்குநராக கவுதம் ராகவன் நியமிக்கப்பட உள்ளார். இவர் பைடன் அறக்கட்டளைக்கு ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

ஜோ பைடனின் உரைகளை எழுதி தரும் பொறுப்பு வினய் ரெட்டிக்கு வழங்கப்பட உள்ளது.

வெள்ளை மாளிகை உள்நாட்டு பருவநிலை கொள்கை அலுவலகத்தில் பருவநிலை கொள்கை மற்றும் புத்தாக்கத்திற்கான மூத்த ஆலோசகராக சோனியா அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்புத் துறை உதவிசெயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேதாந்த் படேல் என்பவரை தேர்ந்தெடுத்துள்ளார்.

நன்றி

விகடன்

No comments

Note: Only a member of this blog may post a comment.