திருகோணமலை சென்ற பருத்தித்துறை வாசிக்கு கொரோனா: பாடசாலை மாணவர்களும் தனிமைப்படுத்தல்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

திருகோணமலை சென்ற பருத்தித்துறை வாசிக்கு கொரோனா: பாடசாலை மாணவர்களும் தனிமைப்படுத்தல்!


வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருகோணமலை மூதூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த நபர் டிசம்பர் 19 ஆம் திகதியிலிருந்து கடந்த புதன்கிழமை வரை அல்வாயிலுள்ள தனது வீட்டில் தங்கியிருந்துள்ளார். கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் பணியாற்றும் அவர், நேற்று முன்தினம் மூதூர் பயணித்தபோது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இனங்காணப்பட்டது.

அவர் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அவரது குடும்பம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அவரது இரு பிள்ளைகளும் பருத்தித்துறை பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட வகுப்புகளில் கடந்த 5ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரை பங்குபற்றியுள்ளார்.

பாடசாலை அமைந்துள்ள பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகரால் பாடசாலையின் 4 ஆசிரியர்களும் 32 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த பாடசாலையின் அதிபர் கடந்த வார புலோலியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் சென்று வந்த தொலைத்தொடர்பு நிலையத்திற்கு சென்று வந்தமையினால், அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.