Breaking News


நேற்று இரவு நெல்லியடி மக்கள் வங்கிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகிள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று  இரவு 11.45 மணியளவில் நெல்லியடி மக்கள் வங்கிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. விபத்தில் வதிரி பகுதியைச் சேர்ந்த பேனாட் கரன் (வயது 40) என்பவரே உயிரிழந்தார்.

அத்துடன் வாகனத்தில் பயணித்த வவுனியா பகுதியைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்கா யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.



விபத்திற்கான காரணம் இன்னமும் தெளிவாக தெரியாவிடினும்  வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியே விபத்து நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் வியாபார நிமிர்த்தம் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்ததாகவும் தெரியவந்துள்ளது

No comments

Note: Only a member of this blog may post a comment.