முள்ளிவாய்க்கால் தூபி மீளமைக்கும் முழுச்செலவையும் ஏற்கும் திருகோணமலையை சேர்ந்த நபரொருவர்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

முள்ளிவாய்க்கால் தூபி மீளமைக்கும் முழுச்செலவையும் ஏற்கும் திருகோணமலையை சேர்ந்த நபரொருவர்!


இந்த நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கான செலவை தானே ஏற்பதாக திருகோணமலையை சேர்ந்த ஒருவர் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் இதனை அறிவித்தார்.

இன்று திங்கட்கிழமை பல்கலைகழக மாணவர்கள் போராட்டக்களத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார்.

“இன்று காலை திருகோணமலையில் இருந்து ஒருவர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டார். பல்கலைகழக சூழலில் புதிய சூழல் அமைப்பதற்கு ஆகும் செலவை தானே ஏற்பதாக தெரிவித்தார். அதனை நான் பல்கலைகழக மாணவர்களிடமும் தெரிவித்தள்ளேன்“ என்றார்.

இதேவேளை, யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது