கிளிநொச்சி ஆனந்தநகர் பகுதியில் அமைந்துள்ள கந்தன்குளத்தின் அணைக்கட்டின்
ஊடாக பெருமளவு நீர் வெளியேறி வருவதனால் அணைக்கட்டு ஆபத்தான நிலையில்
காணப்படுகிறது.
அணைக்கட்டின் துருசு பகுதியின் அருகில் குளத்திலிருந்து நீர் அணைக்கட்டின் ஊடாக வெளியேறிவருகிறது. இது அணைக்கட்டின் மிக மோசமான நிலைமையாகும்.
எனவே தற்போது இராணுவம் மற்றும் பொது மக்கள் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியோர் இணைந்து மண் மூடைகளை அடுக்கி தடுக்கும் பணியில்
ஈடுப்பட்டுள்ளனர்.
இருப்பினும் சேவியர் கடைச் சந்திக்கருகில் குளத்தின் கீழ் பகுதி மற்றும்
கந்தன்குளத்தின் நீர் வெளியேறுகின்ற உருத்திரபுரம் பகுதியில் வாழ்கின்ற
மக்களை அவதானமாக இருக்குமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்
அறிவித்துள்ளது.
No comments
Note: Only a member of this blog may post a comment.