Breaking News


மானிப்பாய் பொலிஸ் பிரிவில் கலாச்சார சீரிழிவு இடம்பெற்ற விடுதியொன்று சிக்கியுள்ளது. இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பகுதியை சேர்ந்த 45 வயதான பெண்ணொருவர், கோப்பாய் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய யுவதியை வைத்து இந்த கலாச்சார சீரழிவை, பணத்திற்காக நடத்தியுள்ளார். அவர்களிற்கு உடந்தையாக முச்சக்கர வண்டி சாரதியொருவரும், நெல்லியடியை சேர்ந்த இளைஞனும் செயற்பட்டனர்.

அங்கு கலாச்சார சீரிழிவு இடம்பெறுவதை அறிந்த மானிப்பாய் பொலிசார், இரகசிய முகவர் ஒருவரை அனுப்பி குழுவை பொறி வைத்து பிடித்தனர்.

அத்துடன், வெளியிலிருந்து செல்லும் ஜோடிகளும் அங்கு பணம் செலுத்தி தங்குமிடத்தை பெற்றுக்கொள்ள வசதியேற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது

No comments

Note: Only a member of this blog may post a comment.