தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் மேலும் 9 உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் விசாரணையின்றி கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
வி.மணிவண்ணன் தரப்புடன் இணைந்து செயற்பட்டார்கள் என்பதனால் அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.
யாழ் மாநகரசபையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் 13 பேரில் 10 பேர் வி.மணிவண்ணனை ஆதரிக்கிறார்கள்.
அண்மையில் நடந்த யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள் வி.மணிவண்ணனை ஆதரித்தனர். இவர்களில் 4 பேர், கட்சி கட்டுப்பாட்டை மீறினார்கள் என குறிப்பிட்டு, ஏற்கனவே கட்சியினால் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள வழக்கையடுத்து, நீக்கத்திற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எஞ்சிய 6 பேரும் இன்று கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
வரதராஜன் பார்த்தீபன், சிவசாந்தன் தனுஜன், இ.ஜனன், பா.பத்மமுரளி, அ.சுபாஜினி, இ.ஜெயசீலன் ஆகியோரே கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்கள் மூவரையும் கட்சியை விட்டு நீக்கியுள்ளது முன்னணி.
தற்போதைய தவிசாளரர் ப.மயரன், அகிலாண்டரூபி, கௌசலா ஆகியோரே நீக்கப்பட்டுள்ளனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.