Breaking News


பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர், தாதியர் உள்ளிட்ட 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புலோலி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு இன்று தொற்று உறுதியானதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புலோலி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் மந்தியை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்று இன்று உறுதியானது. நேற்று அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையின் 7ஆம் இலக்க விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல், சளி, இருமல், தொண்டை நோ போன்ற அறிகுறிகளும் அவரில் தென்பட்டது.

இதையடுத்து, அவரின் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு, யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவர் கொரோனா அறிகுறிகளை அதிகம் வெளிப்படுத்தியதையடுத்து, நேற்று இரவு அவர் வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது பரிசோதனை முடிவுகள் இன்று வெளியானது. அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து, அவருக்கு சிகிச்சையளித்த, தொடர்பில் இருந்த வைத்தியசாலை பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வைத்தியர் ஒருவர், தாதியர்கள் இருவர், மருத்துவ பணியாளர்கள் இருவர், சிற்றூழியர்கள் இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.