பலே கில்லாடி: கொரோனா பாணியை 48,000 ரூபாய்க்கு இணையத்தில் விற்கும் தம்மிக்க! Corona styles - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

பலே கில்லாடி: கொரோனா பாணியை 48,000 ரூபாய்க்கு இணையத்தில் விற்கும் தம்மிக்க! Corona styles


இலங்கையில் கொரோனா மருந்து கண்டுபிடித்ததாக பரபரப்பை கிளப்பிய தம்மிக்க பண்டார தனது பாணி மருந்தை இணையத்தளங்கள் ஊடாகவும் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்.

e-bay ஊடாக விற்பனை செய்ய பாணி மருந்தின் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு போத்தலின் விலை 250 டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 48,500 ரூபா இலங்கை மதிப்பில் வெளிநாடுகளில் விற்பனை செய்ய விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மருந்து விநியோகத்திற்கான தபால் செலவாக 10 டொலரும் மேலதிக அறிவிடப்படுமென விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது பாணி மருந்தை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பருகுவது, சபாநாயகரிடம் மருந்தை வழங்குவது போன்ற படங்களும் விளம்பரத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

Corona styles