ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வரைபொன்றை சமர்ப்பிக்கலாமா என்பதை தீர்மானிக்க, முன்னோடி வரைபொன்று தயாரிக்கப்படவுள்ளது.
நேற்று (6) மூன்று தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
கொழும்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று இரவு இந்த சந்திப்பு நடந்தது. மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், க.வி.விக்னேஸ்வரன், க.சர்வேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்ட சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு தரப்புக்களும் வரைபுகளை சமர்ப்பித்துள்ள நிலையில், புதியதொரு வரைபை தயாரிக்கலாமா என இதில் ஆராயப்பட்டது. ஒவ்வொரு தரப்புக்களும் இதில் யோசனைகளையும், அப்பிராயங்களையும் தெரிவித்தனர்.
கூட்டம் சுமுகமாகவே நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஒவ்வொரு தரப்பும் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், மூன்று கட்சிகளும் இணங்கக்கூடிய விதத்தில் வரைபொன்றை தயாரிக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ.சுமந்திரன், க.சர்வேஸ்வரனை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் அறிக்கையில் மூன்று கட்சிகளும் இணங்கினால், அந்த முயற்சியை தொடர முடிவு செய்யப்பட்டது.
அறிக்கை தயாரிக்க பின்னர், மீண்டும் கூட்டம் இடம்பெறும்.