மன்னாரில் முதலாவது கொரோனா மரணம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் ‘சைட் சிட்டி’ பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த நபர் கடந்த 30 ஆம் திகதி சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி குறித்த நபருக்கு வைத்தியசாலையில் வைத்து பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை(19) காலை உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது வடக்கின் 2வது கொரோனா மரணமாகும்.
No comments
Note: Only a member of this blog may post a comment.