கிறிஸ்தவ போதகர் பால் தினகரனுடன் தொடர்புடைய இடங்களில் நடத்த சோதனையில் அம்பலமான 120 கோடி ரூபா! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

Latest

Breaking News

புதிய செய்திகள்

கிறிஸ்தவ போதகர் பால் தினகரனுடன் தொடர்புடைய இடங்களில் நடத்த சோதனையில் அம்பலமான 120 கோடி ரூபா!


கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்றுள்ளது.

28 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.120 கோடி மதிப்பிலான முதலீடுகள் மறைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதப்பிரச்சார கூட்டங்கள் மூலமான வருவாயை பால் தினகரன் கணக்கில் காட்டாமல் வைத்திருந்ததையும் வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.

கோவை காருண்யா பல்கலைக்கழக கெஸ்ட் ஹவுசில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 5கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராக பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன் வழங்கியுள்ளது.