Breaking News


சுகாதார அமைச்சின் கீழ் உள்ள நான்கு வெவ்வேறு அலகுகளில் இருந்து 10 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை உறுதிசெய்துள்ளார்.

சுகாதார அமைச்சின் கீழுள்ள அலகொன்றில் பணியாற்றும் 7 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனைய 3 அலகுகளிலும் தலா ஒவ்வொரு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒரு அலகிலிலிருந்து ஏற்கனவே 4 கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதையடுத்து, துரித அன்டிஜென் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 6 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொற்றாளர்கள் அனைவரும் சிகிச்சை மையங்களிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். நெருக்கமான தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தலா ஒவ்வொரு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட 3 அலகுகளும் சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்தபடி தொடர்ந்து இயங்கும் என்றும், 7 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட அலகு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.