Breaking News


ஒரு தேங்காயை திருடிய சந்தேகநபரை 100,000 ரூபா பிணையில் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இந்த சம்பவம் கம்பஹா பகுதியில் நடந்தது.

தென்னந்தோட்டமொன்றில் நுழைந்த நபரொருவர் ஒரு தேங்காயை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். தோட்ட உரிமையாளரும், மகனும் அவரை பிடித்து, மல்வதுஹிரிபிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பொலிசார் அவரை கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இதன்போது, சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், உணவு தேவைக்காக ஒரு தேங்காயை எடுத்ததாக தெரிவித்தார்.

அவரை 100,000 ரூபா பிணையில் நீதிபதி விடுவித்தார்.

ஒரு தேங்காய் சுமார் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது

No comments

Note: Only a member of this blog may post a comment.