Breaking News



தம்மிக்க பண்டாரவின் பாணியை 10,000 ரூபா கொடுத்து வாங்கி அருந்தியவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.

கேகாலையை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் அண்மையில் 10,000 ரூபா கொடுத்து, தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்பு மருந்தை பருகியிருந்தார். எனினும், தற்போது அவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.

தம்மிக்கவின் பாணியை பருகிய பின்னர் தொற்றிற்குள்ளாகியுள்ளேன், பத்தாயிரம் ரூபா பறந்து விட்டதே என வர்த்தகர் கவலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தம்மிக்க பண்டாரவின் பாணியை அருந்திய தாமும், தமது குடும்ப உறுப்பினர்களும் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளதாக கேகாலை பிரதேசத்தை சேர்ந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி உள்ளூராட்சிசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.