Breaking News


மக்கள் தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக வேலையை ஆரம்பித்த சித்ரா, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

சித்ரா இன்று அதிகாலை தான் தங்கியிருந்த ஹொட்டல் அறையில் உள்ள மின் விசிறி ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை உலகத்தையே உலுக்கிவிட்டது.

சித்ராவின் இறப்பை குறித்து அவரின் நட்போடு பழகிய பலர் தங்களது இரங்கல்களை, வேதனைகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சித்ராவின் நண்பியும், நடிகையுமான ஷாலு ஷம்மு தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியபோது, “நான் உன்னை இப்படி இழந்து விடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லை.

கடைசியாக நான் உன்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது உன்னுடைய Life Partner பற்றி உன்னுடைய முடிவு குறித்து உன்னை மாற்ற முயற்சித்தேன். ஒவ்வொரு நொடியிலும் நான் உன்னை சமாதானப்படுத்த முயற்சி செய்தேன். ஆனால் அதை நீ ஏற்கவில்லை.

ஒருவேளை இப்படி நடக்கும் என்று எனக்கு முன்பே தெரிந்து இருந்தால் நான் அந்த முயற்சியை மேலும் செய்திருப்பேன். இப்போது நான் உன்னை இழந்து விட்டேன். என் இதயம் சுக்கு நூறாக உடைந்து விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்

No comments

Note: Only a member of this blog may post a comment.