Breaking News


பூநகரி தெளிகரை கிராமத்தின் ஒரு பகுதியில் தேங்கியிருந்த வெள்ள நீரை
அகற்றுவதற்கு பொதுமக்கள் நாளாந்தம் பயன்படுத்தும் வீதியின் குறுக்கே
கனரக வாகனம் கொண்டு வாய்க்கால் வெட்டியதனால் போக்குவரத்து உள்ளிட்ட தமது நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெளிக்கரை பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் தேங்கியிருந்தது.

அவ்வாறே தெளிக்கரை கிராமத்தின் இந்திய வீட்டுத்திட்டப் பகுதியின் ஒரு
பிரதேசத்தில் வெள்ள நீர் தேங்கியிருந்தது. இதனை அகற்ற பூநகரி பிரதேச சபை,
மக்கள் நாளாந்தம் பயன்படுத்துகின்ற ஒரு வீதியின் குறுக்கே வாய்க்கால்
ஒன்றினை வெட்டியதனால் அந்த வீதியினை பயன்படுத்துகின்ற பொது மக்களின்
போக்குவரத்து உள்ளிட்ட நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக
அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பூநகரி பிரதேச சபையின் செயலாளரை தொடர்பு கொண்டு வினவிய
போது, வெள்ள நீரை கடத்துவதற்காக வாய்க்கால் வெட்டப்பட்டது. எனவே
வெட்டப்பட்ட வாய்க்கால் நீர் வடிந்தோடியதும் மீண்டும் மூடிவிடப்படும்
எனத் தெரிவித்தார்

No comments

Note: Only a member of this blog may post a comment.