Breaking News



நெல்லியடி புதிய சந்தையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை இன்று ( 15 ) மேற்கொள்ளப்படுகிறது . 

நெல்லியடி பொதுச் சந்தையுடன் தொடர்புடைய 112 பேருக்கு மேற்கொள்ளப்பட்டு பரிசோதனை மாதிரிகள் அனுப்பப்படுகின்றன . 

மருதனார்மடத்தில் ஏற்பட்ட கொரோனா கொத்தணியை அடுத்து கரவெட்டிப் பிரதேச சபைத் தவிசாளரின் ஏற்பாட்டில் இப்பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது . 

இங்கு பரிசோதனையின் பின்னரான தொற்று இல்லை என்னும் முடிவைப் பெற்றவராக இருப்பின் மட்டுமே , தொடர்ந்து அவர்களது வழமையான வியாபார நடவடிக்கையை நெல்லியடி புதிய சந்தையில் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .

No comments

Note: Only a member of this blog may post a comment.