Breaking News


மன்னார் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை தோற்கடித்து சிறிலங்கா பொது ஜன பெரமுன சார்பில் ஒருவரை தவிசாளராக கொண்டு வருவதாற்கான நடவடிக்கைகளை மன்னார் பிரதேச சபையின் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் 6 பேர் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிய வருகின்றது.

மன்னார் பிரதேச சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 6 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மன்னார் பிரதேச சபையின் சிறிலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இரகசிய கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் மன்னார் பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.எச்.எம்.முஜாஹீர் மன்னார் பிரதேச சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நாளை வியாழக்கிழமை (17) மன்னார் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தற்போதைய தலைவரை தோற்கடித்து புதிய தலைவராக சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஒருவரையும், உப தலைவராக சிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் ஒருவரை நியமிக்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் 6 பேரும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு குறித்த மந்திர ஆலோசனைகளை முன்னெடுத்ததாக தெரிய வருகின்றது.

தமிழரசுக்கட்சி சார்பில் தவிசாளர், உப தவிசாளரை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்காது, சிறுபான்மையினங்களிற்கு அச்சுறுத்தலான ஆட்சியை அமைத்துள்ள தரப்புடன் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயற்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கொள்கைரீதியான இணக்கப்பாடு எதுவும் இருப்பதாக தெரியவில்ல.

மன்னார் பிரதேச சபை தேர்தலின் போது இலங்கை தமிழரசுக்கட்சி 7 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக்கட்சி 7 ஆசனங்களையும், சிறிலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் 2 ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திர கட்சி 2 ஆசனங்களையும், தமிழர் விடுதலை முன்னணி 1 ஆசனத்தையும், ஈழமக்கள் ஜனநாயக கட்சி 1 ஆசனத்தையும், சிறிலங்கா பொதுஜன பெரமுன 1 ஆசனத்தையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.