Breaking News


வலி கிழக்கு தவிசாளர் தியாகராசா நிரோஷிற்கு எதிராக யாழ் மாவட்ட கோட்டாபய ராஜபக்ச அணியான அங்கஜன் இராமநாதன் தரப்பு நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேசசபைக்குட்பட்ட காணியில் வீதி அபிவிருத்தி திட்டமென அங்கஜன் இராமநாதன் அடிக்கல் நாட்டி பெயர்ப்பலகை நாட்டினார்.

கடந்த தேர்தல் சமயத்திலும் நல்லாட்சி அரசின் கம்பெரலிய வீதிகளையும் தனது ஒதுக்கீடு என குறிப்பிட்டு திறந்து வைத்திருந்தார். கோட்டாபய ராஜபக்சவின் பிரதிநிதியாக, பிரதேச அதிகார பரவலாக்கலிற்கு எதிராக- அதில் குறுக்கீடு செய்கிறார் என்ற பரவலான விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், வலிகாமம் கிழக்கிலும் இந்த சிக்கல் உருவானது.

அதிகார பகிர்வை கோரும் தமிழ் மக்கள் கிடைக்கும் நிர்வாக அதிகார அலகுகளை வினைத்திறனாக செயற்படுத்த வேண்டிய தேவையுள்ளது. நிர்வாகரீதியாக பேசி தீர்க்கல்ல விடயத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முறைப்பாடு செய்யப்பட்டதென, பொலிசார் கைது செய்ய முயன்றது அரசியல் பழிவாங்கல் என தியாகராஜா நிரோஷ் குறிப்பிட்டிருந்தார்.

மல்லாகம் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி தாக்கல் செய்த மனுவிலும் அரசியல் பழிவாங்கல் என குறிப்பிட்டிருந்தார்.

மல்லாகம் நீதிமன்றம் நிரோஷிற்கு முன்பிணை வழங்கியது.

இதையடுத்து அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நாளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அந்த பகுதியிலுள்ள அப்பாவிகள் மற்றும் சில குழுக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.


No comments

Note: Only a member of this blog may post a comment.