Breaking News


புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமியொருவரின் கையிலிருந்து எலும்பை வெட்டி அகற்றி, புற்றுநோய் செல்கள் அழிக்கப்பட்ட பின்னர் மீளவும் சிறுமியின் கையில் எலும்பு பொருத்தப்பட்டுள்ளது.

காலி, கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் கடந்த 7 ஆம் திகதி இந்த சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

கராபிட்டி வைத்தியசாலையின் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் ஜனத் லியானகே மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கௌசல் கருணாரத்ன ஆகியோர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

இலங்கையில் இதுபோன்ற அறுவை சிகிச்சை நடந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

பொதுவாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நோயாளியின் கையை வெட்டி அகற்றப்பட்டு வந்தது.

ஒன்றரை வயதான சிறுமியின் இடது கை முழங்கை மற்றும் தோள்பட்டைக்கு இடையிலான எலும்பில் புற்றுநோய் தாக்கம் இருந்தது. இதற்காக ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வந்தும் சிறுமி குணமடையவில்லை.

இதையடுத்து சிறுமியின் கையிலிருந்து எலும்பை அகற்றி புற்றுநோய் செல்களை அழிக்க முடிவு செய்யப்பட்டது.

சிறுமியின் புற்றுநோய் எலும்பு அகற்றப்பட்டு, ஒரு ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டு கராபிட்டி வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது. புற்றுநோய் நிபுணர் வைத்தியர் ஜெயமினி ஹொரந்துகொடவின் ஆலோசனையின் பேரில், கதிரியக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

புற்றுநோய் செல்களை அழிக்க சுமார் 20 நிமிடங்கள் ஆனது. எலும்பை சத்திர சிகிச்சை அறைக்கு கொண்டு வர சுமார் ஒரு மணி நேரம் ஆனது. சுமார் 8 1/2 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, எலும்பு வெற்றிகரமாக மீள பொருத்தப்பட்டது.

“இலங்கையில் இதுபோன்ற முதல் சத்திரசிகிச்சை இதுவாகும். சிறுமி புற்றுநோய்க்கான கீமோதெரபி செய்து கொண்டிருந்தார். ஆனால் இதுபோன்ற புற்றுநோய்கள் ஏற்படும்போது, ​​மருத்துவர்கள் பெரும்பாலும் கையை வெட்டுகிறார்கள். நாங்கள் எலும்பை அகற்றி புற்றுநோயை அழித்து மீண்டும் பொருத்த முடிவு செய்தோம். ஒரு வெற்றிகரமான 8 1/2 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சிறுமி இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவள் கையின் விரல்கள் இப்போது நன்றாக வேலை செய்கின்றன. இரத்த ஓட்டம் நன்றாக உள்ளது. இரண்டு நாட்களில் இன்னும் சில எக்ஸ்-கதிர் சோதனைகளை செய்வோம்.

பெண் வயதாகும்போது, ​​கை சற்று நீளமாக மாறக்கூடும். ஆனால் கையை வெட்டுவதை விட இந்த வகை அறுவை சிகிச்சை முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக செய்ய உதவிய அனைத்து ஊழியர்களுக்கும், தீவிர மருத்துவ பிரிவில் சிறப்பு மருத்துவ வளங்கள் மற்றும் நிபுணர் டாக்டர் பிரஜீத் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஜனத் லியானகே கூறினார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.