Breaking News


மருதனார்மடம் பொதுச்சந்தை மறுஅறிவித்தல் வரை பூட்டப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மருதனார்மட சந்தை வியாாரியொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.இதையடுத்து நேற்று சந்தை வியாபாரிகள், தொற்றாளரின் குடும்ப உறுப்பினர்கள் என 350 பேருக்கும் அதிகமானவர்களின் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டது.

அதிகமானவர்களிடம் ஒரே தடவையில் பிசிஆர் மாதிரிகளை பெறுவது தொழில்நுட்ப தவறுகளை ஏற்படுத்தலாம் என்ற விஞ்ஞானரீதியான அச்சம், நேற்று மருதனார்மட விவகாரத்திலும் பொருந்தியதாக தகவல்.

மருதனார்மட பகுதியில் பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகளில் 170 மாதிரிகள்தான் எதிர்மறையான முடிவை உறுதி செய்தன. 6 பேருக்கு தொற்று என யாழ் போதனா வைத்தயசாலை பணிப்பாளர் அறிவித்தார். முன்னதாக அதிகமானவர்களுக்கு பேருக்கு தொற்று என செய்தி வெளியானது.

முடிவு தெரியாத, சந்தேகத்திற்கிடமான மாதிரிகளில் 104 பேருக்கான பரிசோதனை இன்று மீள இடம்பெறும் 114 பேரின் மாதிரிகள் அநுராதபுரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப சிக்கலால் முடிவு தெரியாத வகை மாதிரிகளாக நூறிற்கும் மேற்பட்டவர்களின் முடிவுகள் உள்ளன. பொதுவாக, முடிவு தெரியாத மாதிரிகளில் பெரும்பாலானவை இரண்டாவது சோதனையில் தொற்று உறுதியாவது வழக்கம்.

இதனால், நேற்று வெளியான முதல் தகவலான 31 தொற்றாளர்கள் என்ற எண்ணிக்கையை அண்மித்த தகவல்கள் இன்று வெளியாகலாமென அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் மருதனார்மட பொதுச்சந்தை மற்றும் சுற்றுவட்டாரங்களிலுள்ள கடைகள் இன்று முதல் மூடப்பட்டுள்ளன.

No comments

Note: Only a member of this blog may post a comment.