Breaking News


தமிழ் அரசியல்வாதிகளிலேயே ராஜபக்ச குடும்பத்துடன் மிக நெருக்கமானவர்கள் முன்னாள் ஆயுத இயக்கங்களோ (தமிழ் அரசியலில் ஒட்டுக்குழுக்கள்), தற்போது அரசுடன் இணைந்திருப்பவர்களோ அல்ல. இலங்கை தமிழ் அரசு கட்சியிலுள்ள இருவர்தான் மிகமிக நெருக்கமான உறவை பேணுபவர்கள் என, கடந்த பொதுத்தேர்தல் சமயத்தில் ஒரு செய்திக்கிடையில் குறிப்பிட்டிருந்தோம்.

அதை சில வாசகர்கள் மறந்திருக்கலாம்.

அப்படியானவர்களிற்கும், யார் அந்த தமிழ் அரசு கட்சியினர் என தலைமை பிய்த்துக் கொண்டிருந்தவர்களிற்கும் இன்று நாடாளுமன்றத்தில் ஒரு விடை கிடைத்திருக்கும்.

இன்று நாடாளுமன்றத்தில் வீதி அபிவிருத்தி அமைச்சிற்கான ஒதுக்கீடு குறித்த விவாதம் இடம்பெற்றது.

இதன்போது, அம்பாறை மாவட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், அம்பாறை வீதி அபிவிருத்தி தேவை, ஐ ரோட் திட்டம் குறித்து பேசினார்.

இதற்கு நாமல் ராபக்ச பதிலளித்தார்.

பின்னர் கருத்து தெரிவிக்க கலையரசன் எழுந்தாலும், அவரால் சிங்களத்தில் நாமலுக்கு பதிலளிக்க முடியவில்லை. கலையரசனின் கருத்தை, அருகிலிருந்த சாள்ஸ் நிர்மலநாதன் எழுந்து குறிப்பிட்டார்.

இதன்போது பதிலளித்த நாமல் ராஜபக்ச- “அந்த குறைபாடுகள் குறித்து பேசுவோம்… நீங்கள் என் தந்தையாரை சந்திக்க அடிக்கடி வீட்டுக்கு வருவீர்களல்லவா ? அப்படி வரும்போது அந்த எம் பியையும் (கலையரசன் ) கூட்டிக்கொண்டு வாருங்கள்…பேசுவோம்…” என்றார்.

நாமல் ராஜபக்ச, சாள்ஸ் நிர்மலநாதனை “மச்சான்“ என மிக நெருக்கமாக விளித்தே பேசுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, அந்த நெருக்கமான உறவுள்ள மற்ற தமிழ் அரசு கட்சி எம்.பி யார் என்பதுதானே வாசகர்களிற்கு இப்பொழுதுள்ள சந்தேகம். யார் அதிகம் புலி வேடம் போடுகிறாரோ… அவர்தான்!

No comments

Note: Only a member of this blog may post a comment.