Breaking News


சாணக்கியனின் மக்கள் நலம் சார்ந்த கோரிக்கைக்கு, நம்பிக்கையோடு இருங்கள் என்று மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்

இதற்கு கேள்விகளுக்கான பதிலோடு செயற்பாடுகளும் இருக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பதில் வழங்கினார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற வாய்மொழி மூலமான கேள்வி நேரத்தின் போதே இவர்கள் இவ்வாறு வாதிட்டுள்ளனர்.

இதன்போது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, நாடாளுமன்றில் வைத்து நீங்கள் நடிகர் ரஜினிகாந்தை போன்றவரா என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் மீனவர்களின் பிரச்சினைகள் குறித்தும் சாணக்கியன் அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விகளுக்கு பதிலளித்த போது அமைச்சர் டக்ளஸ் “நான் சொல்வதை செய்வேன், செய்வதையே சொல்வேன். தீரா பிரச்சினைகளாக வைத்திருக்க நான் எதைனயும் அணுகுவதில்லை. மேலதிகமாக நிதியைப் பெற்று மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்” என பதிலளித்திருந்தார்.

“நீங்கள் மிக அழகாக ரஜனி காந்தைப் போன்று சொல்வதைச் செய்வேன், செய்வதைச் சொல்வேன் என கூறுகின்றீர்கள், நன்றி, அவ்வாறு நடந்தால் சந்தோசம்” என சாணக்கியன் இதற்கு பதிலளித்திருந்தார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் இந்த நகைச்சுவையான சம்பாஷனை இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.