Breaking News


கிளிநொச்சியிலும், முள்ளிவாய்க்காலிலும் வலுக்கட்டாயமாக ஆட்களை படைக்கிணைத்து வந்த கண்ணதாசனிற்கும் சிறையில் கொரோனா தொற்று உறுதியானது.

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கண்ணதாசன், பிணையில் விடுவிக்க தயாராக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று உறுதியானது.

இதையடுத்து, அவர் கந்தக்காடு சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

யுத்தத்தின் இறுதியில் புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட கண்ணதாசன், யாழ் பல்கலைகழக இசைத்துறை விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். அவர் கிளிநொச்சியில் நுண்கலைக்கல்லூரி பொறுப்பாளராக செயற்பட்ட போது உருத்திரபுரம் மற்றும் முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிகளவானவர்களை கட்டாயமாக படைக்கு இணைத்திருந்தார். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பமொன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து அவர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.