Breaking News


தெல்லிப்பழை மகாஜான கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்கள் அடையாளம் காணப்பட்டனர. தரம் 7, 9 இல் கல்வி கற்கும் சகோதரிகளிற்கே தொற்று உறுதியாகியுள்ளது.

மருதனார்மடத்தில் அடையாளம் காணப்பட்ட முதலாவது தொற்றாளருடன் தொடர்பை பேணி, கீரிமலை கூவில் பகுதியில் மறுநாள் அடையாளம் காணப்பட்டவரின் மகள்கள் இருவருமே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாணவிகள் இருவரும் கடந்த வாரமும் பாடசாலை சென்று வந்துள்ளனர். தரம் 9 மாணவி, கடந்த சனிக்கிழமை பாடசாலையில் நடந்த பரீட்சையிலும் கலந்து கொண்டுள்ளார்.

மாணவிகளுடன் கல்வி கற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என சுமார் 80 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments

Note: Only a member of this blog may post a comment.