Breaking News


கொழும்பு, மவுண்ட் லாவினியா புகையிரத நிலையத்தின் அறிவித்தல் பலகையில் ஆங்கிலம், மாண்டரின் (சீன) மொழியில் மட்டும் அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணை நடத்தப்படும் புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

மவுண்ட் லாவினியா புகையிரத நிலையத்தின் அறிவித்தல் பலகையில் நீண்டதூர புகையிரதங்கள் பற்றிய விபரங்கள் ஆங்கிலம், மாண்டரின் (சீன) மொழியில் மட்டும் காண்பிக்கப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இது தொடரபான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை புகையிரத திணைக்கள பொது மேலாளர் திலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டில் இயங்கும் அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச தனியார் நிறுவனங்களும், இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளை மட்டுமே கொண்ட பெயர் பலகைகளை காட்சிப்படுத்த சட்டங்களை முன்மொழிகிறது என்று அதிகாரப்பூர்வ மொழி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையில் செயல்படும் சில சீன நிறுவனங்கள் மாண்டரின் மொழியில் பலகைகளை காட்சிப்படுத்தியுள்ளதாக ஆணைக்குழுவின் உதவி இயக்குநர் சிவப்பிரகாஷம் மதிவாணன் தெரிவித்துள்ளார். இது இலங்கை அரசியலமைப்பின் 4 வது பிரிவை மீறுவதாகும்.

அரசியலமைப்பின் கீழ், சிங்கள மற்றும் தமிழின் தேசிய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் பெயர் பலகைகளைக் காண்பிக்க வேண்டும், அதன்பிறகு மாற்று மொழியாகக் கருதப்படும் ஆங்கிலம் இடம்பெறும்.

கடந்த அரசாங்கத்தில் சீனா நிதியுதவியில் புத்தளம், அருவாக்காடு பகுதியில் அமைக்கப்பட்ட கழிவு மேலாண்மை மையத்தின் பெயர்ப்பலகையில் சீன மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது குறித்து தமக்கு முறைப்பாடு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.