Breaking News


மோகனதாஸ் என்பவரின் சடலத்திற்கு பதிலாக செல்வராசா என்பவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட விவகாரத்தை இன்று தமிழ்பக்கம் வெளியிட்டது.

பின்னர், மோகனதாஸ் என்பவரின் 15 வயதான மகள் சடலம் மாறி வந்ததை அவதானித்ததை தொடர்ந்து, வைத்தியசாலை நிர்வாகம் சடலத்தை மாற்றி கொடுத்திருந்தது.

இந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படாமல் அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டதாலேயே மோகனதாஸ் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளனர்.

உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் தனது பேஸ்புக் பதிவில்- எது சித்தப்பா கோவிந்தன் மோகனதாஸ் இன்று இறைபாதமடைந்தார். கிளிநொச்சி வைத்தியசாலையில் நேற்று இவர் நெஞ்சுநோ காரணமாக அனுமதிக்கப்பட்டார். வைத்திய அதிகாரிகள் இவரை கொரோனா சந்தேகத்தில் தனியறையில் பூட்டி வைத்துள்ளனர். நேரடியான வைத்திய கண்காணிப்பு இன்மையால் பூட்டிய அறைக்குள்ளேயே இறந்து கிடந்துள்ளார். அதிகாரிகளின் அலட்சியத்தால்  சித்தப்பாவை இழந்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

குறிப்பிட்ட நபர், நேற்றிரவு நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக, கொரனா இருக்கலாம் என்ற அச்சத்தால் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரவு முழுவதும் தனிமைப்படுத்தல் விடுதியில் விடப்பட்டவர் காலையில் சடலமாக காணப்பட்டார்.

கடந்தவாரம் இதே வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளி அவசர சிகிச்சை எனக் காரணம் காட்டி சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டபின் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அவ்வேளையிலேயே தனிமைப்படுத்தல் விடுதியில் ஏன் அவசர சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இருப்பினும் அந்தச் சம்பவத்தை மூடி மறைக்க எத்தனித்த வைத்தியசாலை நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளமை மீண்டும் இந்த அநியாயச் சாவின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

வைத்தியசாலைகளில் நெஞ்சுவலி போன்ற ஆபத்தான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு பிசீஆர் முடிவுகள் வரும்வரையில் சிகிச்சை வழங்காது காத்திருக்க முடியாது என்பதால் அவ்வாறான நோயாளர்களுக்கு அன்ரிஜின் (antigen) சோதனை செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் இருபது நிமிடங்களில் கொரனா உண்டா இல்லையா என அறிய முடியும்.

இந்த அன்ரிஜின் பரிசோதனைக்குரிய மருந்துகள் மற்றும் கருவிகள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு ஒரு மாதத்திற்கு முன்னரேயே சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுவிட்ட போதிலும் இன்றுவரை அவை பாவிக்கப்படாமலே வைக்கப்பட்டுள்ளனஇ

அசமந்தமான நிர்வாக சூழல் காரணமாக ஏற்படும் இந்த தவறுகள் உடனடியாக திருத்தப்படாவிட்டால் கிளிநொச்சியில் பல அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்படலாம்.



No comments

Note: Only a member of this blog may post a comment.