Breaking News


‘மணித் தோழரும், மயூரன் தோழரும் இனி எங்கள் ஆட்கள் தானே… அடுத்த வரவு செலவு திட்டத்தை இரு தரப்பும் சேர்ந்தே தயாரிப்போம்’ என ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) மூத்த பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

யாழ் மாநகரசபை, நல்லூர் பிரதேசசபை என்பவற்றில் முறையே வி.மணிவண்ணக், ப.மயூரன் ஆகியோரை ஈ.பி.டி.பி ஆதரித்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தொடர்புபட்ட இந்த இரகசிய நடவடிக்கையில் வி.மணிவண்ணன் தரப்பும்- ஈ.பி.டி.பி தரப்பும் நேரடியாக பேச்சில் ஈடுபட்டது தொடர்பான பல தகவல்கள் தற்போது வெளிவர தொடங்கி உள்ளது

இந்த நிலையில், வரவு செலவு திட்டம் குறித்து ஈ.பி.டி.பியின் மூத்த பிரமுகர் ஒருவரிடம் இன்று வினவிய போது

‘மணித் தோழரும், மயூரன் தோழரும் இனி எங்கள் ஆட்கள் தானே… அடுத்த வரவு செலவு திட்டத்தை இரு தரப்பும் சேர்ந்தே தயாரிப்போம். அதில் எங்கள் உறுப்பினர்களின் வட்டாரங்களில் கூடுதல் அபிவிருத்தி திட்டங்களை செய்வதென்பதும் இரு தரப்பு இணக்கப்பாடுகளி்ல் ஒன்று. எங்களிற்குள் சில இணக்கப்பாடுகள் ஏற்பட்டது உண்மைதான். அது பற்றி நான் பேசமாட்டேன். ஆனால், யாழ் மாநகர மக்கள் எதிர்பார்ப்பதை போன்ற சிறந்த வரவு செலவு திட்டமொன்றை முன்வைப்போம்“ என்றார்


No comments

Note: Only a member of this blog may post a comment.