ராஜஸ்தானில் மணமகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதுகாப்பு உடை அணிந்து ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டது.
ராஜஸ்தானில் ஷாபாத் நகரில் பரா பகுதியில் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. அதற்கு முன், மணமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதன் முடிவுகள் வெளியானதில், மணமகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனினும், திருமணம் செய்து கொள்வதில் இருவரும் உறுதியாக இருந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மணமக்கள் இருவரும் கொரோனா தடுப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டனர். பின்பு இருவரும் சடங்குகளை முறையாக பின்பற்றி திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நபரும் தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மணமகன் பாரம்பரிய தலைப்பாகை மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டார். இதேபோன்று மணமகளும், முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்தபடி காணப்பட்டார்.
கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. இவர்களின் இந்த திருமணம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது.
No comments
Note: Only a member of this blog may post a comment.