
யாழ் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படிக்கும் போது காதலித்து வந்த முல்லைத்தீவைச் சேர்ந்த காதலனிடம், தனது கணவனைக் கைவிட்டுவிட்டு கனடாவிலிருந்து லண்டனுக்கு ஓடித்தப்பியுள்ளார் வவுனியாவைச் சேர்ந்த 33 வயதான இளம் குடும்பப் பெண். குறத்த குடும்பப் பெண்ணும் லண்டன் காதலனும் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கற்று வந்துள்ளனர். இந் நிலையில் காதலனுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து இருவரும் இடை நடுவில் காதலைக் கைவிட்டுள்ளனர், இந் நிலையில் குறித்த இருவரும் 2012ம் ஆண்டு பட்டதாரிகளாக பட்டம் பெற்றதுடன் குறித்த பெண் பட்டம் பெற்ற கையுடனேயே கனடாவில் பிரஜாஉரிமையுள்ள தனது துாரத்து உறவினரான வவுனியாவைச் சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து 2014ம் ஆண்டளவில் கனடா சென்றுள்ளார்.
இவர்களுக்கு தற்போது இரு குழந்தைகளும் உள்ளதாகத் தெரியவருகின்றது. இந் நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றை நடாத்தி வந்த குறித்த பெண்ணிக் காதலன் 2015ம் ஆண்டு லண்டன் சென்றுள்ளார், இதன் பின்னர் குறித்த இருவருக்கும் இடையில் சமூகவலைத்தளத்தில் ஏற்பட்ட தொடர்புகளை அடுத்து மீண்டும் இவர்களுக்கிடையில் காதல் மலர்ந்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த காதலனும் 2019ம் ஆண்டு முல்லைத்தீவைச் சேர்ந்த ஒரு பெண்ணை பதிவுத்திருமணம் முடித்து மலேசியாவில் உல்லாசப்பிரயாணங்களும் முடித்துவிட்டே லண்டன் திரும்பியிருந்தார். தற்போது குறித்த இருவரது அலங்கோலக் காதலால் இரண்டு அப்பாவிகள் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கின்றார்கள்.
No comments
Note: Only a member of this blog may post a comment.