பல கோடி ரூபா பெறுமதியில் காப்பற் வீதயாக அமைக்கப்பட்ட சாவகச்சேரி நகரசபையின் கற்குழி முதலாம் வீதி மற்றும் மண்டுவில் முதலாம் மைல்கல் வீதி ஆகிய வீதிகள் குறுக்காக வெட்டி சேதமாக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினர் ம.நடனதேவன் தனது வீட்டுக்கு முன்னாலேயே குறித்த வீதியினையும் பிறிதொரு முன்னணியின் நகரசபை உறுப்பினர் சு.நிதிகேசன் தனது வட்டரத்திறகு உட்பட்ட மண்டுவில் முதலாம் மைல்கல் வீதியினையும் இருவருமாக இணைந்து குறுக்காக வெட்டி சேதமாக்கியுள்ளனர்.
அண்மையில் பெய்த கடும் மழையினால் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறித்த உறுப்பினர் வீட்டிலும் சிறிதளவு வெள்ளம் நின்றுள்ளது. இதனால் நேற்று இரவு முன்னணி உறுப்பினர் ம.நடனதேவன் அடாவடியாக காப்பற் வீதியினை குறுக்காக வெட்டியுள்ளார்.
உறுப்பினர் காப்பற் வீதியை வெட்டி சேதமாக்குவதை அவதானித்த குறித்த வீதியில் இருக்கும் மக்கள் இவ்வாறு வெட்டினால் வீதி மோசமாக சேதமாகிவிடும் என அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இதனை செவமடுக்காமல் தான்தோன்றித்தனமாக காப்பற் வீதியினை வெட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக நகரசபைத் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதனிடம் வினவிய போது நகரசபைக்கு சொந்தமான வீதியினை எவ்வித அனுமதியும் இன்றி அடாத்தாக வெட்டி குறித்த உறுப்பினர் சேதமாக்கியுள்ளார்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலரும் என்னிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன் புகைப்பட ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர். எனவே குறித்த உறுப்பினர் மீது பொதுச்சொத்துக்களை சேதமாக்கல் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றோம் எனவும் தவிசாளர் தெரிவித்துள்ளார்.
கடுமையான மழைவெள்ளத்தில் பொதுமக்களே இருக்கின்ற போது சிறிதளவு வெள்ளத்தினை அகற்றுவதற்கு பலகோடி பெறுமதியான காப்பற் வீதியைனை வெட்டி சேதமாக்கிய முன்னணி உறுப்பினரின் அடாவடியை பலரும் விமர்சித்துள்ளனர்.
No comments
Note: Only a member of this blog may post a comment.