கிளிநொச்சியில் பெய்த பலத்த மழையினால் கனகபுரம் பண்ணை வீதியில் அமைந்திருந்த பாலத்தை வெள்ளம் அள்ளிச் சென்றுள்ளது.
இதனால் குறித்த பாதையின் ஊடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வந்த பலத்த மழை காரணமாக குறித்த பாலம் முழுமையாக சேதம் அடைந்துள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தி வந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த வீதி 2012ம் ஆண்டு காலப்பகுதியில் அபிவிருத்தி செய்யப்பட்டது.
இந்நிலையில், குறித்த பாலத்தினை புனரமைத்து தமது போக்குவரத்திற்கு விரைவாக தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
No comments
Note: Only a member of this blog may post a comment.