Breaking News


வருட இறுதி கொண்டாட்டத்திற்கு சென்றவர்கள் உயிலங்குளம், வங்காலை, கட்டைக்காடு முசலி போன்ற இடங்களை சேர்ந்தவர்கள் என்றும் ஆற்றில் குளிக்கும் போது போதையில் இருந்ததாகவும் குளித்த இடத்தில் மதுப் போதத்தல்களும் சமைத்த உணவுகளும் மீட்கப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட கிராம சேவையாளர்கள் நால்வரும் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் காணாமல் போன கிராம சேவையாளரை தேடும் பணி இடம் பெற்று வருகின்றது.

காணாமல் போன கிராம சேவையாளர் நானாட்டான் கட்டைக்காட்டு பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருவியாற்றில் குளிப்பது ஆபத்தானது என்று நானாட்டான் பிரதேச சபையால் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments

Note: Only a member of this blog may post a comment.