Breaking News


கேகாலையில் கொரோனா மருந்துப் பாணி வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து என ஆயுர்வேத வைத்தியர் தம்மிக்க பண்டாராவினால் பிரகடனப்படுத்த மருந்தை பெற, நேற்று பெருமளவானவர்கள் அங்கு குவிந்தனர்.

தன்னால் தயாரிக்கப்பட்ட மருந்து கொரேனாவை ஒழிக்கவல்லது என அவர் பிரகடனப்படுத்தியிருந்தார்.

அவரது உதுமகம இல்லத்தில் நேற்று 10,000 பேர் வரை குவிந்தனர். இதையடுத்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் தலையிட்டு, கேகாலை மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர். இதன்போது மருந்து குறித்த முழுமையான ஆய்வுகள் முடியும் வரை மருந்து பாணியை விநியோகிப்பதில்லையென முடிவானது.

எனினும், மருந்திற்கான தேவை இருப்பதால் அதை தயாரிக்கும் பணியை தொடரப் போவதாக தம்மிக்க பண்டார தெரிவித்தார்.

இதேவேளை நேற்று 7600 பேருக்கு மருந்து பாணி வழங்கப்பட்டுள்ளதாக தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்பிக்க கேகாலைக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

No comments

Note: Only a member of this blog may post a comment.