Breaking News


வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியவர் சற்றுமுன்னர் இளவாலைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று மாலை சேந்தாங்குளம் வசந்தபுரம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது இடையில் வழிமறித்த மோட்டார் வண்டியொன்றில் வந்த இருவர் தலைக்கவசத்தினால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.தாக்குதலில் வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்துள்ளது.

அவ்வாறு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் செல்லும் போது குறித்த நபரை இடையில் வைத்து வழிமறித்த பொலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் இளவாலைப் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் தாக்குதல் நடத்தியவர்கள் மதுபோதையில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments

Note: Only a member of this blog may post a comment.