Breaking News


180 மில்லிலீற்றர் மது போத்தல்களை வாங்குபவர்களடமிருந்து வைப்புத்தொகை பெற முடிவு எட்டப்பட்டுள்ளது. மதுவரி திணைக்களம் மற்றும் கலால் திணைக்களம் மற்றும் இணைந்த அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எட்டப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

180 மில்லிலீற்றர் மது போத்தல்களுக்கான வைப்புத் தொகை குறிப்பிடத்தக்கதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் தொகை குறித்த இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை.

மது உற்பத்தி நிறுவனங்கள் கட்டுப்பாட்டை அமல்படுத்தத் தவறினால் 180 மில்லி லீற்றர் மதுபான போத்தல்கள் தடை செய்யப்படும் என்றார்.

180 மில்லிலீற்றர் மது போத்தல்கள் சுற்றுச்சூழலுக்கு மோசமாக தீங்கு விளைவிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 180 மில்லிமீற்றர் மதுபான போத்தல்களில் 120 மில்லியன் போத்தல்கள்  ஆண்டுதோறும் தயாரிக்கப்படுகிறது.

60% க்கும் மேற்பட்ட போத்தல்களை மறுசுழற்சி செய்ய முடிவதில்லை என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியது.

No comments

Note: Only a member of this blog may post a comment.