Breaking News


யாழ்ப்பாணம் மாநகரசபையின் சட்டத்தரணிக்கு எதிராக, யாழ்ப்பாணம் மாநகரசபையினால் யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மாநகரசபை எல்லைக்குள் சட்டவிரோதமாக கட்டடம் அமைத்த குற்றச்சாட்டில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநகரசபை சட்டத்தரணி தவிர்ந்த மேலும் 9 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மாநகரசபை சட்டத்தரணி சட்டவிரோதமாக கட்டடம் அமைத்துள்ளார் என மாநகரசபை அமர்வில் பெரும் பிரயளம் கிளம்பியிருந்தது. எனினும், அப்போதைய முதல்வர் இ.ஆனல்ட் வழக்கு தொடர்வதை தவிர்த்து வந்தார்.

ஆனல்ட் பதவியிழந்த பின்னர், யாழ் மாநகரசபையினால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது

No comments

Note: Only a member of this blog may post a comment.