Breaking News


திருகோணமலை கன்னியாவில் இப்பொழுது இருக்குமிடத்தை தவிர்த்து, பிறிதொரு இடத்தில் பிள்ளையார் ஆலயம் அமைப்பதற்கு தமக்கு ஆட்சேபணையில்லையென அரச தரப்பு அறிவித்துள்ளது.

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய காணி தொடர்பான வழக்கு இன்று (11) திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அந்த பகுதியில் ஆலயம் அமைப்பதில் தமக்கு ஆட்சேபணையில்லையென அரச தரப்பு தெரிவித்தது.

இந்த விவகாரம் ஏற்கனவே மனுதாரர்களிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், பிள்ளையார் ஆலயத்தை அமைப்பற்கு அரச தரப்பினரே இடமொன்றை அடையாளப்படுத்தியிருந்தனர். எனினும், ஆலய நிர்வாகம் அந்த இடத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது.

இன்று இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆலயம் அமைக்க பொருத்தமான இடம் என ஆலய நிர்வாகம் சார்பில் ஒரு இடம் சுட்டிக்காட்டப்படவுள்ளது. அந்த இடம் தொல்லியல் சின்னங்களற்ற இடம் என தொல்லியல் திணைக்களம் குறிப்பிட்டால் அங்கு ஆலயம் அமைப்பதில் இணக்கப்பாடு எட்டப்படலாம்.

வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

No comments

Note: Only a member of this blog may post a comment.