Breaking News


கிளிநொச்சி, முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

பல்வராயன்கட்டு, சோலை மாதிரிக்கிராமத்தில் இன்று காலை 10 மணியளவில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

செ.பிரதீபன் (32) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இளைஞனின் உடலில் அடி, வெட்டுக்காயங்கள் காணப்படுகின்றன. கழுத்தின் பின் பகுதியில் உயிரிழப்பை ஏற்படுத்திய பாரிய வெட்டுக்காயம் உள்ளது. கை, கால்களிலும் வெட்டுக்காயங்கள் உள்ளன.

காதல் விவகாரத்தினால் கூலிப்படையினரே இளைஞனை கடத்தி அடித்தும், வெட்டியும் கொலை செய்துள்ளதாக உறவினர்கள் குற்றம்சுமத்துகிறார்கள்.

எனினும், பொலிசார் அதனை இதுவரை உறுதிசெய்யவில்லை.

ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.