Breaking News


வில்பத்து தேசிய பூங்காவிற்கு அண்மையிலுள்ள இறால்மடுவா பகுதியில் நெல் வயலில் நூற்றுக்கணக்கான சிறிய பறவைகள் திடீரென இறந்தது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து, பறவைகளின் பாகங்களை அரச பகுப்பாய்வாளர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை பிரிவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள உதவி இயக்குநர் எரந்த கமகே தெரிவித்துள்ளார்.

புத்தளம், வனாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எலுவாங்குளம் பகுதியில் இறால்மடுவ பகுதி அமைந்துள்ளது.

அங்குள்ள நெல்வயல்களில் ஏராளம் சிறிய பறவைகள் உயிரிழந்து காணப்பட்டன.

புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள உதவி இயக்குநர் எரந்த கமகே-

“இந்த சம்பவம் நடந்தவுடன், வனதவில்லுவ வனவிலங்கு அதிகாரிகள் இறால்மடுவ பகுதிக்கு அனுப்பப்பட்டனர். எங்கள் அதிகாரிகள் பல சம்பவங்கள் குறித்து சிறப்பு விசாரணையைத் தொடங்கினர். அதே நேரத்தில் சில நாட்களுக்கு முன்பு நெல் வயலில் நெல் பயிரிட்ட விவசாயியிடமிருந்து அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இந்த பறவைகளை அரசு பகுப்பாய்வாளர் மற்றும் வனஜிவராசிகள் திணைக்கள கால்நடை பிரிவுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த சிறிய பறவைகள் வயல் நிலத்திற்கு பாவிக்கப்பட்ட இரசாயன உரத்தினால் இறந்ததா அல்லது வேறு காரணமா என்பது இன்னும் தெரியவில்லை. விஷம் அல்லது வேறு ஏதேனும் நோயால் இறந்தால், இந்த சிறிய பறவைகளை உணவாக உட்கொள்ளும் நரிகள்,  பருந்துகள் உள்ளிட்ட மாமிச உண்ணிகள் பெரும் ஆபத்தில் உள்ளன.

எனவே, அப்பகுதியில் இறந்த பறவைகள் அனைத்தும் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களால் பாதுகாப்பாக அகற்றப்பட்டன ”என்றார்





No comments

Note: Only a member of this blog may post a comment.