Breaking News


பொருட்களின் விலையேற்றம் மற்றும் மரக்கறிகளின் விலை ஏற்றத்தினால் மக்கள் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தற்போதுள்ள அரசாங்கமே காரணம் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் அரசாங்கத்தை கடுமையாக சாடினர்.

யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து பேசினர்.

கொவிட் தொற்றினால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்த வண்ணம் உள்ளனர். பிரதான இன்னலாக இப்பொழுது இருப்பது வாழ்க்கைச் செலவு. தற்போது நாட்டில் அரிசியின் விலை என எடுத்துக்கொண்டால் அரசாங்கம் கூறுகின்றது 90 ரூபாவிற்கு அரிசி தருவதாக கூறுகின்றது. ஆனால் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது அரிசியின் விலை. விலைவாசியை குறைப்பதாக அரசாங்கம் கூறிக்கொண்டு நான்கு தடவைகள் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு இருந்தது. தேடிப் பார்த்தால் கட்டுப்பாட்டு விலைக்கு அரிசியோ சீனியும் விற்பனை செய்யப்படவில்லை. சீனி 85 ரூபாய் தருவதாகக் கூறி இருந்தார்கள் ஆனால் தற்போது சீனியின் விலை 120. பருப்பு 100 ரூபாவுக்கு தருவதாக கூறினார்கள் ஆனால் 180 ரூபா. நாளுக்கு நாள் மக்களினுடைய வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவினை தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் தத்தளித்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

மரக்கறிகளும் அதிகரித்த விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றது.

மக்களுக்கு எந்தவித வருமானமும் இல்லை. நாட்டிலுள்ள கூலித் தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கவில்லை. அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.

அதேபோல தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் கடைகளில் வேலை செய்பவர்களின் வருமானம் அதிகரிக்கப்படவில்லை. இதற்கு நாங்கள் மறு புறத்திலிருந்து பார்க்கின்ற பொழுது பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.  தேர்தல் காலங்களில் மேடை மேடையாக பேசியவர்கள் வாழ்க்கை செலவினை குறைப்பதாக கூறியிருந்தார்கள் ஆனால் வாழ்க்கைச் செலவை குறைக்க படவில்லை மாறாக பொருட்களின் விலையை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச கம்மன்பில வீரவன்ச போன்றவர்கள் இதே மரக்கறிகளை எடுத்துக்கொண்டு கூறினார்கள் மரக்கறி விலை அதிகரித்துள்ளது என்று. மக்களுக்கு சுகமா என்று கேட்டார்கள். இந்த கோட்டபாய ராஜபக்ஷ அவர்க ளுடைய அரசாங்கமும் அவர்கள் ஆட்சிக்கு வர முன்னம் அவருடன் சேர்ந்து பேசியவர்களும் உயர்த்துவோம் என்றெல்லாம் கூறி அதேபோல் பாவனையாளர்களின் வாழ்க்கைச் செலவினை குறைப்போம் என்றெல்லாம் கூறினார்கள். மக்களின் நலன் சார்ந்த விடயங்களை மேற் கொள்வோம் என்றெல்லாம் கூறி இருந்தார்கள். ஆனால் இவர்களுடைய ஆட்சியிலும் கூட வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளது.

ராஜபக்ஷ அவர்களிடம் நாங்கள் கேட்க வேண்டிய ஒரே கேள்வி “இப்ப நல்ல சுகமா இருக்குதா என்று” இவர்கள் மக்களுக்கு கண்கட்டி வித்தை காட்டி இருக்கின்றார்கள். இவர்கள் மக்களுடைய நலன் சார்ந்து எந்த விடயங்களையும் செய்ய மாட்டார்கள். இவர்கள் மீண்டும் மோசடி செய்யவே ஆட்சிக்கு வந்துள்ளார்கள். இவருடைய சகாக்கள் மக்களுடைய வரிப் பணத்தை சுரண்டி தங்களுடைய பொக்கெற்றுக்குள் போடுவதற்கே இவர்கள் உள்ளார்கள். சீனி கொள்வனவின் போது தனிநபர் ஒருவர் வருமானம் ஈட்டுவதற்கு இவர்கள் துணையாகவும் இருக்கின்றார்கள்.நாட்டினை நாசமாக்கி நாட்டின் வளங்களை தாரை வார்க்க வந்தார்களே தவிர நாட்டிலே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் தாரை வார்க்க இவர்கள் இப்பொழுதும் இருக்கின்றார்கள். எதிர்கால சந்ததியினருக்கு உரிய காணிகளையும் வளங்களையும் தாரை வார்க்கவே இவர்கள் உள்ளார்கள்.

No comments

Note: Only a member of this blog may post a comment.