Breaking News


வவுனியாவில் தனியார் விடுதியொன்றில் வைத்தியர்கள் வருட இறுதி விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனா அபாயம் தலைவிரித்தாடும் நிலையில் பொதுமக்களிற்கு பல்வேறு சுகாதார நடைமுறைகள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளன.பொதுநிகழ்வுகளில் மக்கள் கலந்து கொள்ளும் எண்ணிக்கையிலும் வரையறை செய்யப்பட்டுள்ளது.

தற்போது வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், வருட இறுத பண்டிகைகளிற்கும் பல கட்டுப்பாட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வருட இறுதி கேளிக்கை நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்.

அண்மையில் மட்டக்களப்பில் 47 பேர் வருட இறுதி விருந்திற்காக ஒன்றுகூடிய நிலையில் சுகாதாரத்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று வவுனியா தனியார் விடுதியொன்றில் வைத்தியர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் வருட இறுதி விருந்துபசாரத்தில் கலந்து கொண்டுள்ளனர். கணிசமான எண்ணிக்கையானவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

No comments

Note: Only a member of this blog may post a comment.