Breaking News


புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதார சிக்கலில் இருப்பவர்களை இலக்கு வைத்து வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பரந்தன் பகுதியில் முன்னாள் பெண் போராளியொருவர் கிளைமோர் குண்டை எடுத்துச் சென்றபோது கைதான சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அந்த கிளைமோர் புதிதாக தயாரிக்கப்பட்டது இல்லை. மிகவும் பழமை வாய்ந்தது. இந்த நாட்டில் தீவிரவாதிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்த சுமார் 12000 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர்.

அவர்களை இலக்கு வைத்து வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பப்பட்டு இந்த மாதிரியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இராணுவத்தினர் வேறு விடயங்களில் கவனம் செலுத்தும் சந்தர்ப்பங்களிலேயே இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள் என்றார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.