Breaking News


பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த சித்ராவின் மரணம் ரசிகர்களை உலுக்கியுள்ளது. அன்று, விஜய் டிவியின் ’ஸ்டார்ட் மியூஸிக்’ என்ற ரியாலிட்டி ஷோவின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு அதிகாலை மழை பெய்யுமோ என்று அஞ்சி பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் தங்கி இருக்கிறார் சித்ரா. அவருடன் திருமணம் செய்த ஹேமந்த் ரவியும் அந்த ஹோட்டலில் இருந்திருக்கிறார்.

ஹேமந்த்தை வெளியில் ஆவணமொன்றை எடுத்து வர சொல்லி இருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும், சித்ரா பதிலளிக்காததால் மாற்று சாவி மூலம் திறந்து பார்த்தால் அங்கு இருக்கும் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று சித்ராவின் உடல் சோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவர் தற்கொலை செய்துக் கொண்டு தான் இறந்தார் என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சீரியல் நடிகை ரேகா நாயர், “அவன் தொழிலதிபர் எல்லாம் கிடையாது. சொந்தமாக சட்டை கூட இல்லாத சாதாரண ஆள் தான். நண்பர்களின் சட்டையை தான் வாங்கி போட்டுக்கொண்டு சுத்துவான். அவனுக்கு, சில அமைச்சர்களின் மகன்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார். ஆனால், அவரை அந்த முடிவுக்கு அவன் தான் காரணம். ஒரு ஷூட் முடித்து விட்டு வந்த ஒரு பெண்ணை ஒரு இரண்டு மணி நேரத்தில் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு என்ன நடந்தது.



அவன் தானே கூட இருக்கான். அவள் கஷ்டத்தில் இருந்தால் நீ அவளுக்கு ஆதரித்து ஏதாவது ஆறுதல் சொல்லி இருக்கணும். ஆனா, அதை அவன் பண்ணல. அவன் ஒரு ஒன்னுத்துக்கும் உதவாத ஆள். எந்த வேலையும் செய்யாமல், பெண்களுடன் சுற்றுவது. பார்ட்டி, பப்களில் கலந்து கொண்டு பொழுதை போக்குவது தான் அவனுடைய முழு நேர வேலையே”. என்று சித்ராவின் கணவர் ஹேம்நாத் குறித்த சில பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

No comments

Note: Only a member of this blog may post a comment.